கூட்டணி குறித்து 15 கட்சிகளுடன் மொட்டு கட்சி பேச்சு!

பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஈடுபட்டுள்ளது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” ஐக்கிய தேசியக்கட்சி மட்டுமல்ல கூட்டணி சம்பந்தமாக 15 கட்சிகளுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் பரந்தப்பட்ட கூட்டணி அமையும்.

அதேபோல புதிய அமைச்சரவையும் விரைவில் நியமிக்கப்படும்.” – எனவும் ரஞ்சித் பண்டார குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles