கொட்டகலை பகுதியில் 2ஆம் அலகு தடுப்பூசி ஏற்றல்

கொரோனா தடுப்பூசியின் (சினோபாம்) 2ஆவது அலகை செலுத்தும் வேலைத்திட்டம் இன்று (26) கொட்டகலை சுகாதார பிரிவில் முன்னெடுக்கப்பட்டது.

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட கொட்டகலை மற்றும் யுலி பீல்ட் ஆகிய கிராம சேவகர் பகுதிகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று 2ஆம் அலகு தடுப்பூசி ஏற்றப்பட்டது.

கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி வேலைத்திட்ட நிகழ்வில் வைத்தியர்கள், சுகாதார அதிகாரிகள், சபை உறுப்பினர் ஐயாதுரை பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Related Articles

Latest Articles