சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கடன் தாமதமாகலாம் -சர்வதேச நாணய நிதியம்

“இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கடன் எப்போது வழங்கப்படும் என உறுதியாகத் தெரிவிக்க முடியாது. ஏனெனில் இலங்கை விதிக்கப்பட்ட இலக்குகளின் நோக்கங்களை நிறைவேற்றத் தவறியுள்ளது. அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கடன் கால தாமதமாகலாம்.”

– இவ்வாறு சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக்குழுவின் தலைவர் பீற்றர் புருவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இரண்டாவது தவணைக் கடன் எப்போதும் வழங்கப்படும என்பது குறித்து நிலையான கால அட்டவணை எதனையும் தெரிவிக்க முடியாது.

இலங்கை இரண்டு முக்கிய நோக்கங்களை நிறைவேற்றத் தவறிவிட்டது.

நாங்கள் திருப்தியடைவதற்கு இரண்டு விடயங்கள் அவசியம். நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள், கொள்கைள், சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் நாங்கள் இணக்கப்பாட்டை எட்டவேண்டும் அதுவே நாங்கள் முன்னேறிச் செல்ல உதவும். அதன் மூலமே நாங்கள் திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற முடியும்.

ஆகவே, ஒரு விடயத்தில் ஒரு வருடத்தில் குறைபாடுகள் உள்ளதை நாங்கள் காணமுடிகின்றது. அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முயல்கின்றோம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles