சிவனொளிபாத மலைக்கு பொருட்களை எடுத்துச்சென்ற ஹெலிகாப்டர் – நடந்தது என்ன?

சிவனொளி பாத மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டம் இலங்கை விமானப்டையின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மிக முக்கிய புனித ஸ்தலங்களுள் சிவனொளிபாதமலையும் ஒன்றாகும். இந்த மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையேயான எல்லையில் அமைந்துள்ளது.

இது கடல் மட்டத்திலிருந்து 7359 அடி உயரமானதாகும். பருவகாலம் ஆரம்பித்துவிட்டால் யாத்திரிகள் வெவ்வேறு இடங்களிலிருந்து இங்கு வருவார்கள். பொதுவாக யாத்திரிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் இரவிலே படி ஏறத்துவங்கினால், ஏறி முடிக்கும் போது ஏறத்தாழ காலையில் சூரிய உதயத்தைக் காண முடியும்.

மேலும் இந்த மலை பல ஆறுகளின் நதிமூலம். இலங்கையின் நீண்ட நதியான மகாவலி கங்கை, களு கங்கை, களனி கங்கை உள்ளிட்ட பல ஆறுகள் ஊற்றெடுப்பது இந்த மலையில் தான் ஆரம்பமாகின்றது.

இத்தனை சிறப்பு மிக்க சிவனொளி பாத மலையில் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டம் இலங்கை விமானப்டையின் உதவியுடன் இடம்பெற்றுள்ளது.

இலங்கை விமானப்படையின் எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர் மூலம் சிவனொளிபாதமலையை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை சிறப்பாக முடிவடைந்துள்ளது.

இதன்போது மக்களுக்குத் தேவையான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கான பொருட்களை கொண்டு செல்வது தொடர்பிலான பணி வெற்றிகரமான நிறைவடைந்துளள்து.

நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் ஊடாக சிவனொளிபாதமலையில் வழிபாடுகளில் ஈடுபடும் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்காக, குடிநீர் வநியோக கட்டமைப்பு ஒன்று இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு அவசியான மின்மாற்றி மற்றும் மின்சார உபகரணங்கள் போன்றவற்றுடன் குடிநீர் விநயோக கட்டமைப்பிற்கு தேவையான உபகரணங்களை இந்த ஹெலிகொப்பரர் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

25 தடவைகள் பயணித்து சுமார் 25 தொன் நிறையுடைய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. சீரற்ற காலநிலை காரணமாக சில தடங்கள் ஏற்பட்டபோதும் இப்பணி சிறப்பாக இப்பொழுது முடிவடைந்துள்ளது. இதன் மூலமாக சிவனொளிபாதமலையில் குடிநீர்ப்பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles