இரத்தினபுரி உட்பட 08 மாவட்டங்களில் நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 31 ஆயிரத்து இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
7 ஆயிரத்து 983 குடும்பங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாகவே பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
859 வீடுகள் பகுதியளவும், 2வீடுகள்முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரத்து 204 குடும்பங்களைச் சேர்ந்த4 ஆயிரத்து 558 பேரும், கொழும்பு மாவட்டத்தில் ஆயிரத்து571 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 773 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கம்ஹா மாவட்டத்தில் 3 ஆயிரத்து 950 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 313 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.










