நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை மேலும் ஓரிரு தினங்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சி இடம்பெறலாம் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் காலங்களில் தற்காலிகமாக கடும் காற்றும் மின்னல் தாக்கமும் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ள அந்த திணைக்களம் மக்கள் அத்தகைய இயற்கை அனர்த்தங்களிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதில் இருந்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
சீரற்ற காலநிலையால் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். 6 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் காணாமல்போயுள்ளார்.
