ஆட்சியை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்படும் – என்று முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
“களுத்துறையில் இருந்து ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவால் களுத்துறையில் இன்று கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு கூறினார். மே 9 ஆம் திகதிக்கு பிறகு பொதுவெளியில் மஹிந்த பங்கேற்கும் கூட்டம் இதுவாகும்.
” இலங்கை இன்று பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், அந்த சவால்களை வெற்றிகொள்ளும் பலம் கட்சிக்கு இருக்கின்றது. நாட்டு மக்களுக்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டு.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டைக் காப்பாற்றி வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஜனாதிபதி ஐ.தே.க.வைச் சேர்ந்தவர் என்பதாலேயே அப்போது அவரை திட்டினாலும், தற்போது அவர் சரியான பாதைக்கு வந்துள்ளார். ” – எனவும் மஹிந்த குறிப்பிட்டார்.










