‘ஜெனிவாத் தொடரை இலங்கு வைத்து இலங்கைமீது கறுப்புப்புள்ளி’

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஆரம்பமாகும் சமயத்தில், இலங்கையின் மனித உரிமை நிலைவரம் தொடர்பில் கறுப்பு புள்ளியை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் இன்றளவிலும் தொடர்கின்றன – என்று இராஜாங்க அமைச்சர் செயான் சேமிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி போலித்தகவல்களை சமூகமயப்படுத்தும் நடவடிக்கை இன்னும் நிறுத்தப்படவில்லை. குறிப்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடர் நடைபெறும் காலப்பகுதியில், இலங்கையில் மனித உரிமை நிலைவரம் தொடர்பில் கறுப்பு புள்ளியை ஏற்படுத்துவதற்கு சில குழுக்கள் திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்டுவருகின்றன.

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரம் மீண்டெழுவதை அந்தக்குழுக்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதனால் சமூகவலைத்தளங்களில் கடத்தல்கள் பற்றியும் ஏனைய விடயங்கள் பற்றியும் பதிவிடப்படுகின்றன. இவ்வாறான நடவடிக்கை தனி நபருக்கு இலாபமாக இருக்கலாம். ஆனால் இராஜதந்திர மட்டத்தில் அது நாட்டுக்கு தாக்கமாகவே அமையும்.

எனவே, ஊடகங்களுக்கு ஒழுக்கக்கோவை இருப்பதுபோல, சமூக ஊடகங்களுக்கும் அவ்வாறான ஒழுக்கக்கோவை அவசியம்.” – என்றார்.

Related Articles

Latest Articles