” எதிர்க்கட்சிகள் தலைகீழாக நின்று போராடினால்கூட இந்த அரசை கவிழ்க்கமுடியாது என்பதை கூறிவைக்க விரும்புகின்றோம்.” – என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
” நாட்டு மக்கள் தற்போது கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் என்பது எமக்கு தெரிகிறது. இந்நிலைமையில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் பொறுப்பை நாம் ஏற்கின்றோம். எங்களுக்கு சிறுது காலம் அவகாசம் தாருங்கள்.
நாடாளுமன்றத்தில் மூன்று நான்கு பேர் கத்துகின்றனர். காலிமுகத்திடலில் போராட்டம் நடத்துகின்றனர். இப்படியான நடவடிக்கைகள் மூலம் மட்டுமல்ல அல்ல, தலைகீழாக நின்று போராடினால்கூட இந்த அரசு கவிழாது.” – என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.
