தேயிலையின் விலை அதிகரித்தால் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பங்கு இலாபமும் அதிகரிக்கும்.சில தோட்டங்களில் தொழிலாளர் சிலருக்கு கடந்த வருட பங்கு இலாபம் ஒரு இலட்சம் வரையில் கிடைக்கப்பெற்றுள்ளது என்று களனிவெளி, தலவாக்கலை மற்றும் ஹொரணை ஆகிய பெருந்தோட்ட நிறுவனங்களின் முகாமைத்துவ பணிப்பாளர் ரொசான் ராஜதுரை தெரிவித்தார்.
பொது நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கு போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரையாற்றி அவர்,..
இலங்கையில் வருடம் முழுவதும் 2000 மில்லி மீற்றர் வரை மழை வீழ்ச்சி உள்ள ஒரு நாடாகும்.தேயிலை உற்பத்தியின் போது தேயிலை தளிரின் ஈரப்பதனை இல்லாமல் செய்வதற்கு விறகு மற்றும் மின்சார பயன்பாடு அதிகம் தேவைப்படுகின்றது. அதனால் மின்சாரத்தின் தேவை தினமும் அதிகளவில் தேவைப்படும் ஒரு உற்பத்தித் துறையாகவே தேயிலை உற்பத்தி காணப்படுகின்றது. இந்நிலையில் மின் மற்றும் எரிப்பொருட்களின் விலை அதிகரிப்பானது தேயிலை உற்பத்தியில் மூன்று மடங்குக்கு மேல் உற்பத்தி செலவை அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்நிலையில் 2018ஆம் ஆண்டு வரை மிகவும் நட்டத்தில் இயங்கி வந்த இந்த தொழிற்துறையானது கடந்த ஆண்டு ஓரளவு இலாபத்தை பெற்றுள்ளது.
இலாபம் கிடைத்தால் மக்களுக்கும் எமக்கு நன்மை கிட்டும்.விலை குறைந்தால் பங்கு இலாபமும் குறைவடையும் என்று தெரிவித்தார்.










