தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் நிறைவேற்றம்!

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 61 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 97 பேரும், எதிராக 36 பேரும் வாக்களித்திருந்தனர்.

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்படி இன்று முற்பகல் 10.30 முதல் மாலை 5.00 மணிவரை விவாதம் நடைபெற்று இறுதியில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.

Related Articles

Latest Articles