நாளை கூடுகிறது நாடாளுமன்றம் – எம்.பியாக வஜீர சத்தியப்பிரமாணம்

ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜீர அபேவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக நாளை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

நாடாளுமன்றம் நாளை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. இதன்போது அவர் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பியான ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே வஜீர நியமிகப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles