நிதி அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நிதி அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை நியமித்துள்ளார்.

இது தொடர்பான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவிடம் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

நிதி அமைச்சின் கீழ் உள்ள இலங்கைப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பணிப்பாளராக பல வருடங்களாக மூலதனச் சந்தையை ஒழுங்குபடுத்துவதில் பங்களித்த சூரியப்பெரும, உலக வங்கியின் இலகுவில் வணிகமயமாக்கல் குறித்த, சர்வதேச தரவரிசைப்படி, சிறிய அளவிலான முதலீட்டாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் தரவரிசையை 74 ஆவது இடத்திலிருந்து 28 ஆவது இடத்திற்கு உயர்த்துவதற்கும் பங்களித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவனத்தில் வணிக நிர்வாகம் தொடர்பில் MBA பட்டத்தையும் பெற்றுள்ள அவர், மலேசியாவின் முகாமைத்துவம் மற்றும் விஞ்ஞான பல்கலைக்கழகத்தில் (Management and Science University) கலாநிதி பட்டத்தையும் பெற்றுள்ளார். அவர் ஐக்கிய இராச்சியத்தின், பட்டய கணக்காளர் முகாமைத்துவ நிறுவனம் (CIMA) மற்றும் பட்டய சான்றளிக்கப்பட்ட கணக்காளர்கள் சங்கத்தின் (ACCA) உறுப்பினரும் ஆவார்.

அவர், பணமோசடி தடுப்பு செயலணியின் உறுப்பினராக மூலதனச் சந்தையைப் பிரதிநிதித்துவப்படுத்தி செயற்பட்டுள்ளதுடன், சிறிய மற்றும் மத்தியதர தொழில்முயற்சிகளை பட்டியலிடுவதற்கான கொள்கைகள் உட்பட, நிதித்துறையில் தற்போதுள்ள கொள்கைகளை உருவாக்குவதற்கும் அவர் பங்களித்துள்ளார். மேலும், தனியார் துறையின் உயர்மட்ட நிறுவனங்களின் பிரதான நிறைவேற்று அதிகாரி பதவி உட்பட பல முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார்.

கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும இதற்கு முன்னர் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராகவும் கடமையாற்றினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles