நுவரெலியா ,ஹட்டன் கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக, இன்று (செப்டம்பர் 25) ஹட்டன் மற்றும் நுவரெலிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மலையகப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை மற்றும் மழையுடனான வானிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சீரற்ற காலநிலையால் ஏற்படக்கூடிய அனர்த்த அபாயங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் கல்வி அதிகாரிகள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles