நுவரெலியாவில் 5 சபைகளுக்கு ‘சேவல்’ – 7 இல் ‘யானை’!

உள்ளாட்சிமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 5 சபைகளுக்கு தனித்து சேவல் சின்னத்திலும், 7 சபைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்தும் இதொகா போட்டியிடவுள்ளது.

இதன்படி நுவரெலியா பிரதேச சபை, அக்கரப்பத்தனை, கொட்டக்கலை, நோர்வூட் ,மஸ்கெலியா ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தலில் இ.தொ.கா. சேவல் சின்னத்தில் களமிறங்கவுள்ளது.

அத்தடன், வலப்பனை, ஹங்குராங்கெத்த, கொத்மலை, அம்பகமுவ ஆகிய பிரதேச சபைகளுக்கு ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

நுவரெலியா மாநகர சபை, தலவாக்கலை-லிந்துலை நகர சபை மற்றும் ஹட்டன் நகர சபை ஆகியவற்றிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் யானை சின்னத்தில் களமிறங்கவுள்ளது என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles