நாடாளுமன்றம் கூடுகின்ற தினங்களிலும், வரவு செலவுத்திட்ட விவாதம் இடம்பெறுகின்ற காலப்பகுதியிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது பணிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை பத்திரத்தை பிரதமர் தினேஷ் குணவர்தன முன்வைத்துள்ளார்.
இதற்கமைய அவசர மருத்துவ தேவைக்களுக்கு அல்லது அரசின் அவசர பணிகளுக்கான சந்தர்ப்பங்கள் தவிர்ந்த, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரசாங்க கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.










