பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்க எதிர்க்கட்சிகள் முடிவு!

வரவு- செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.

இதன்போது அதற்கு ஆதரவாக வாக்களிக்க ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்கட்சி உள்ளிட்ட அரச ஆதரவு கட்சிகள் தீர்மானித்துள்ளன.

எனினும், பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, உத்தர லங்கா சபாகய, சுதந்திர மக்கள் பேரவை என்பன அறிவித்துள்ளன.

Related Articles

Latest Articles