புளியாவத்தை நகருக்கு வெகுவிரைவில் சதொச விற்பனை நிலையம்….

புளியாவத்தை நகரில் வெகு விரைவில் சதொச விற்பனை நிலையம் அமைக்கப்படவுள்ளது என நோர்வூட் பிரதேச சபை உபதலைவர் கிஷோகுமார் தெரிவித்தார்.

” புளியாவத்தை பகுதியை பொறுத்த வரை பத்தாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்குடும்பங்களில் 90 வீதமானோர் பெருந்தோட்ட தொழிலாளர்கள். எனினும், சதொச விற்பனை நிலையமொன்று இல்லை.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சூழ்நிலையில், அரசினால் வழங்கப்படும் – நிவாரணமாக கிடைக்கக்கூடிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக இங்குள்ளவர்களுக்கு ஹட்டனுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதற்காக போக்குவரத்து செலவும் ஏற்படுகின்றது.

இவ்விடயங்களை சுட்டிக்காட்டி, நோர்வூட் பிரதேச சபை உபதலைவர் என்ற ரீதியிலும் புளியாவத்தை வட்டார பொறுப்பாளர் என்ற ரீதியிலும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தேன்.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் , துறைசார் அமைச்சர் நளின் பெர்ணான்டோவுக்கு, புளியாவத்தை நகரில் சத்தோச விற்பனை நிலையத்தை அமைக்க மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.” – என்றும் நோர்வூட் பிரதேச சபை உபதலைவர் கிஷோகுமார் தெரிவித்தார்.

நிருபர் – நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles