தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில், கடந்த ஐந்து வருடங்களில், இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு எதிராக 9,295 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதல், சித்திரவதை, பாரபட்சம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பொலிஸ் துறையின் செயலற்ற தன்மை ஆகியவை அடங்குகின்றன. தகவலறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி, இந்த முறைப்பாடுகள், தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றன.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கான நிதி ஒதுக்கீடு 2015 ஆம் ஆண்டை விடவும் 2018 இல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
