பதுளை, மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட , பிடாடமாறுவ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து, எரிகாயங்களுடன் 87 வயதுடைய முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த முதியவரின் மகன் தொழிலுக்கு சென்று, வீடு திரும்பிய வேளையிலேயே, தனது தகப்பனார் எரிகாயங்களுடன் கருகிய நிலையில் சடலமாக கிடப்பதைக் கண்டு உடனடியாக மடூல்சீமை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்துக்கு விரைவந்த பொலிஸார் ஸ்தல விசாரணைகளை மேற்கொண்டனர். சடலம் தற்போது பதுளை வைத்தியசாலையின் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இம்மரணம் கொலையா, தற்கொலையா என மடூல்சீமை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
– ராமு தனராஜ்-
