மலையக புகையிரதப் பாதையில் பண்டாரவளைக்கும் ஹீல்ஓயாவுக்கும் இடையில், மைல்கல் 162/54 பகுதியில் இன்று (04) அதிகாலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாகத் தடைப்பட்டிருந்த ரயில் சேவைகள் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளன.
குறித்த பகுதியில் ரயில் பாதையில் சரிந்து விழுந்திருந்த பாரிய கற்பாறைகள் மற்றும் மண் மேடுகளை அகற்றும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, பாதை சீரமைக்கப்பட்டு பதுளை – அம்பேவெல இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.
இதனால், மண்சரிவு காரணமாகப் பயணிகள் எதிர்கொண்ட போக்குவரத்து அசௌகரியங்களும் முடிவுக்கு வந்துள்ளன.
பதுளை நிருபர் – சுரேஷ்ராஜரத்தினம்










