ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்ள விசேட பிரதிநிதிகள் குழு, நாளை வெள்ளிக்கிழமை ஜெனீவாவுக்கு செல்கிறது.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவே இவ்வாறு நாளை பயணிக்கவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகி, ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை தொடர்பான அறிக்கையை பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இந்த அறிக்கை ஏற்கனவே, இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எதிர்வரும் வியாழக்கிழமை அதற்கு பதிலளித்து உரையாற்றவுள்ளார்.
