மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து இடைநிறுத்தம்

மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகளை நாளை (17) முதல் இடைநிறுத்தவுள்ளன என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம தெரிவித்தார்.

இதன்படி நாளை (17) முதல் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களின் போக்குவரத்து வசதி கருதி மாத்திரமே மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் கடந்த புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டன.

எனினும், சுகாதார நடைமுறைகள் உரியவகையில் பின்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles