மின்சாரம் தாக்கி தோட்ட தொழிலாளி பலி! மூன்று பிள்ளைகள் நிர்க்கதி!!

மின்சாரம் தாக்கிய நிலையில் கடந்த 11 நாட்களாக கண்டி வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வந்த தோட்டத் தொழிலாளியான இளம் குடும்பஸ்தர் இன்று காலை உயிரிழந்தார்.

சாமிமலை, கவரவில தோட்டத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான நல்லையா சிவகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஹெரன பெருந்தோட்ட நிர்வாகத்துக்குட்பட்ட கவரவில தோட்டத்தில், தொழில் நிமித்தம்சென்றபோது, இவர் கடந்த 24 ஆம் திகதி மின்சார தாக்குதலுக்கு உள்ளானார்.

இதனையடுத்து கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லபட்டு மேலதிக சிகிச்சைக்காக கன்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

கடந்த பதினொரு தினங்களாக அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று இவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

செதி பெருமாள்

Related Articles

Latest Articles