சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சந்திவெளி ஆற்றில் மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.
சந்திவெளி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தையா பவானந்தன் ( வயது 44) என்பவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் வளமையாக சந்திவெளி ஆற்றில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் வளமை போன்றோ நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணி அளவில் குறித்த சந்திவெளி ஆற்றில் மீன்பிடிக்க சென்று உள்ளார்.
மீன்பிடிக்க சென்றவர் காலை விடிந்த பிற்பாடும் வீடு திரும்பாத நிலையில் குறித்த மீன்பிடி இடத்துக்குச் சென்ற மீன் வியாபாரி ஆற்றில் மீன்பிடி தோனி மாத்திரம் மிதந்து கொண்டிருப்பதை அவதானித்ததை அடுத்து தேடிச் சென்று பார்த்தபோது ஆற்றுக்குள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளை தோணியிலிருந்து ஆற்றுக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என திடீர் மரண விசாரி அதிகாரியிடம் உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்தார்.
சடலத்தை கண்டதும் உறவினர்கள் உயிரிழந்தவரின் வீட்டுக்கு நேரடியாக கொண்டு சென்ற நிலையில்
உயிரிழந்தவரின் வீட்டுக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி பார்வையிட்டதும் மீன்பிடியில் ஈடுபட்ட ஆற்றங்கரை மற்றும் தோணியினையும் பார்வையிட்டு அறறிக்கையை பெற்றுக்கொண்டனர்.
உயிரிழந்தமை தொடர்பில் சந்திவெளி பொலிஸ் குறித்த இடத்துக்கு வருகை தந்து பார்வையிட்டதும் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றார்கள்.










