ஐக்கிய மக்கள் சக்தியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளன என்று தகவல்கள் வெளியானாலும், இன்னும் அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
அத்துடன், தமிழ் முற்போக்கு கூட்டணியில் எம்.பிக்கள் இருவரும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலரும் அரசுடன் இணையவுள்ளனர்.
