ரணில் இருக்க பயமேன்? அவரின் ஆட்சியில் குரங்கும் இருந்தது தேங்காயும் இருந்தது!

“ இந்நாட்டை பாதுகாக்கக்கூடிய ஒரேயொரு தேசியத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. எதிர்வரும் ஏப்ரல், மே மாதமளவில் நாட்டு மக்கள் மறுபடியும் தெருவுக்கு வந்தால் ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார். ரணில் இருக்க பயமேன்?” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை ஆளும்போது 77 வருடகால சாபம் என்றார்கள், ஆனால் தேங்காய் விலை 100 ரூபாவாக இருந்தது. தற்போது தேங்காய் விலை 240 ரூபா. ரணில் ஆட்சியில் குரங்கும் இருந்தது தேங்காயும் இருந்தது. அரிசி விலையும ; உரிய வகையில் பேணப்பட்டது. அதனால்தான் அனுபம் வேண்டும் எனக் கூறினோம். அன்று இது புரியவில்லை. இன்று மக்களுக்கு புரிய ஆரம்பித்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்க நள்ளிரவு 12 மணிவரை வேலை செய்வார். ஆனால் அதனை ஊடகங்கள் முன்வந்து கூறுவதில்லை. ஜனாதிபதியாக பதவி வகித்தபோது ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி மாளிகையில் இருக்கவில்லை. ஐந்து தடவைகள் பிரதமராக இருந்தார். அலரிமாளிகையில் தங்கவில்லை. இதனை அவர் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தவில்லை.

உலகுடன் உறவாடி இந்நாட்டை பாதுகாக்கக்கூடிய ஒரே தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்கதான். சுற்றுலாத்துறைக்கு பொருத்தமான நாடாக 2018 இல் இலங்கை இருந்தது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் உயிர்த் த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் வருகையை தடுப்பதும், ரணில் ஆள்வதை தடுப்பதும் இதன் நோக்கம்.

எதிர்வரும் ஏப்ரல், மே மாதங்களில் தெருவுக்கு வந்த பிறகு எம்மை திட்டி வேண்டாம். எமது தலைவர் வந்து எப்படியும் நாட்டை மீட்டுக் கொடுப்பார். ஆனால் பாரிய தாக்கங்கள் ஏற்படக்கூடும்.” – என்றார்.

Related Articles

Latest Articles