‘ரஷ்ய – உக்ரைன் முறுகலால் இலங்கையின் பொருளாதாரமும் பாதிக்கும்’

ரஷ்ய துருப்புகள் நேற்றிரவு உக்ரைனுக்குள் நுழைந்துள்ளதால், உலக சந்தையில் எரிபொருள் விலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது இலங்கை பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

” எரிபொருட்களின் விலை 115 டொலர்கள் வரை அதிகரிக்கப்படுவதால் இலங்கைக்கு பாதகமான பாதிப்பு ஏற்படும்.

அத்துடன் உக்ரைனில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைத் தொடர்ந்து கட்டாரில் இருந்து அதிக ,இயற்கை எரிவாயு பங்குகளை ஐரோப்பா கொள்வனவு செய்வதால், இலங்கைக்கு போதுமான எரிவாயு கையிருப்பு கிடைக்கப் போவதில்லை. இதனை எப்படி கையாள்வது என்பது குறித்து நிதி அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

பழைய விலைக்கு எரிபொருள் வாங்கப்பட்ட மூன்று கப்பல்கள் உள்ளன. அவற்றுக்கு கட்டணம் செலுத்தி, விடுவித்துக்கொள்ள வேண்டும்.” – என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles