‘ரஷ்யா, உக்ரைன் மோதல்’ – இலங்கையின் நிலைப்பாடு அறிவிப்பு

” ரஷ்யா, உக்ரைன் விவகாரத்தில் எந்தவொரு பக்கத்துக்காகவும் கதைக்க முடியாது. இது விடயத்தில் இலங்கை நடுநிலை வகிக்கும்.” – என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” உக்ரைன், ரஷ்ய விவகாரம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதல் நிலை இலங்கை பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தும். சுற்றுலாத்துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

உக்ரைனில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் எகிப்தில் உள்ள தூதரகம் தொடர்பில் உள்ளது. பிரச்சினைகள் பேச்சுவார்த்தமூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதையே இலங்கை விரும்புகின்றது.” – என்றும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles