லிற்றோ கேஸ் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுப்பு!

லிற்றோ (12.5 கிலோ) சமையல் எரிவாயுவின் விலையை ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்குமாறு லிற்றோ நிறுவனம், நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

லிற்றோ சமையல் எரிவாயு தற்போது 2 ஆயிரத்து 675 ரூபாவுக்கு விற்பனையாகின்றது.

டொலர் இல்லாத காரணத்தால் எரிவாயு இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என லிற்றோ எரிவாயு நிறுவனம் நிதி அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

ஆயிரத்து 800 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவுடன், கப்பலொன்று கடந்த 12 ஆம் திகதி இலங்கை வரவியிருந்தது. எனினும், டொலர் இல்லாத காரணத்தால் நிறுவனம் ஐந்து நாட்கள் எரிவாயு விநியோகத்தை நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles