உலகப் பொருளாதாரத்தில் நிலவும் அபாயங்களைக் களைவதற்கு ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு G– 7 நாடுகளின் நிதி அமைச்சர்கள் உறுதிபூண்டுள்ளனர்.
அதேபோல சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணைப் பகுதியை மீண்டும் திறக்க வேண்டியது அவசியம் எனவும் அவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
உலகப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் சவால்களை எதிர்கொள்ள நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதையும் G- 7 நிதி அமைச்சர்கள் எடுத்துரைத்துள்ளனர்.
பாரிஸில் நடைபெற்ற இம்மாநாட்டில் கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றிருந்தனர்.
