நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
“ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் ” சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில், ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இப்படத்தை இயக்கியுள்ளார்.
விறுவிறுப்பான அரசியல் திரில்லரான கராத்தே பாபு படம் தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரவி மோகனின் 34-வது படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, சோனி மியூசிக் நிறுவனம் இசை உரிமையை பெற்றுள்ளது.
தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.










