கறுப்பு சட்டை போராட்டத்துக்கு
8 ஆண்டுகள்…!!
மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உரிமையை வலியுறுத்தி, மலையக இளைஞர்களின் பங்கேற்புடன் 2018ஆம் ஆண்டு இதே நாளில் கொழும்பு காலி முகத்திடலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கறுப்புச் சட்டை அணிந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுதிரண்டு, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா நாளாந்தச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனக் குரல் எழுப்பினர்.
சம்பள உயர்வுக் கோரிக்கையைத் தாண்டி, மலையக மக்களின் காணி உரிமை, அரசியல் பிரதிநிதித்துவம், சமூக மற்றும் பொருளாதார விடுதலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் அன்றைய போராட்டத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் காலி முகத்திடலில் திரண்ட அந்த இளைஞர் எழுச்சி, மலையக மக்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பதிவாகியுள்ளது.










