சார்பட்டா பரம்பரை 2- படப்பிடிப்பு விரைவில்!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியான திரைப்படம் தான் ‘சார்பட்டா பரம்பரை’. இந்த திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்து இருந்தார்.சஞ்சனா நடராஜன், ஆர்யா , ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், பசுபதி, ஜான் விஜய், பிரியதர்ஷினி ராஜ்குமார், அனுபமா குமார், கலையரசன் உள்ளிட்ட பல பிரபலங்களும் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. ஓடிடியில் படம் சூப்பர் ஹிட் ஆகி திரையரங்குகளில் வெளியாகவில்லயே என்ற வருத்தத்தை கொடுத்தது என்று கூட சொல்லலாம்.

அப்படி வருத்தம் அடைந்த ரசிகர்களுக்காகவே ‘சார்பட்டா பரம்பரை’ 2 படம் உருவாகவுள்ளதாகவும், அந்த படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது . படத்திற்காக ஆர்யா தீவிரமாக பாக்சிங் பயிற்சி செய்யும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.

இந்த நிலையில், தற்போது அதனை தொடர்ந்து தற்போது சார்பட்டா பரம்பரை 2 படம் எத்தனை கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, சார்பட்டா பரம்பரை 2 படம் மொத்தமாக 90 கோடி (இந்திய ரூபா) அளவில் பிரமாண்டமாக உருவாகவுள்ளதாம். ஆர்யா சினிமா கேரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாகவும் இந்த படம் இருக்குமாம். விரைவில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles