” ஜனாதிபதி, பொதுத்தேர்தல்களில் மொட்டு கட்சியே வெற்றிவாகை சூடும்” – சாகர

அடுத்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும் – என்று அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மொட்டு கட்சியின் பொலன்னறுவை தொகுதிக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களுக்கு எதிராக போலிக்குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்களை அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன எனவும் சாகர சுட்டிக்காட்டினார்.

அதேவேளை இக்கூட்டத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச,

” தேர்தல்மூலம் அல்லாமல் பலவந்தமாக ஆட்சியை பிடிப்பதற்கு சிலர் முற்படுகின்றனர்.” – என சுட்டிக்காட்டினார்.

மக்கள் போராட்டத்தின்போது நாடாளுமன்றத்தை எரிக்க வந்தவர்களுக்கு எதிராக இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்தும் நாமல் எம்.பி. அதிருப்தி வெளியிட்டார்.

Related Articles

Latest Articles