பிரதமர் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி!

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் புதிய அரசியல் அணியை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்கள் மேற்கொண்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அந்த அரசியல் சக்தியை கட்டியெழுப்ப பிரதமர் என்ற முறையில் தனது ஆசியையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குவதாகவும் அவர் கூறினார்.

மல்வத்து மகாநாயக்கர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரரை நேற்று (18) சந்தித்து நல்லாசி பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஆதரவு வழங்கிய பெரும்பான்மையான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக மேற்கொண்ட தீர்மானத்தை நிராகரித்து ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.

அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன போன்ற பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இரண்டு வருடங்களாக மிகவும் சிரமப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட நாடு தற்போது சரியான பாதையில் முன்னேற்றம் கண்டுவருகிறது. இந்த வெற்றியை மேலும் பாதுகாப்பதற்கும் முன்னெடுப்பதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுகின்றோம். இப்போதே உள்ளாட்சி முதல் பாராளுமன்றம் வரை அனைத்து எம்பிக்களும் கைகோர்த்து வருகின்றனர்.

இதனால் அடுத்த தேர்தலில் வேட்புமனு கிடைக்காமல் போய்விடுமோ என்று யாரும் பயப்பட வேண்டாம்.அவர்களுக்கு இவ்வாறான அச்சுறுத்தலுக்கு நாம் இடமளிக்க மாட்டோம்.

புதிய அரசியல் சக்தியை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். அதற்காக, எனது முழு ஒத்துழைப்பையும் ஆசிகளையும் வழங்குகிறேன் என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தனவும் கலந்துகொண்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles