‘போர்க்குற்ற ஆதாரம் திரட்டும் ஐ.நா. பொறிமுறைக்கு இலங்கை கடும் எதிர்ப்பு’

இலங்கையில் மோதல்கள் இடம்பெற்ற வேளையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவங்கள் தொடர்பில், சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் சாட்சிகளை சேகரிக்கும் நடைமுறைக்கு முற்றிலும் எதிர்ப்பைத் தெரிவிப்பதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் 49ஆவது கூட்டத்தொடரில் நேற்று (01) உரையாற்றிய போதே வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த சாட்சிகளை சேகரிக்கும் நடைமுறைக்காக கடந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பாக யோசனை ஒன்றுக்கு அங்கீகாரம் பெறப்பட்டதோடு அவ்வாறான நடைமுறையை பின்பற்றுவதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மீறிய செயல் எனவும் இவ்வாறான நடைமுறை ஊடாக இலங்கையிலும் மற்றும் அதற்குவெளியேயும் நடுநிலை மற்றும் சமாதானத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இவ்வாறான நடைமுறை இலங்கையின் நல்லெண்ணத்திற்கு தடையாகும் என சுட்டிக்காட்டிய பேராசிரியர் ஜி எல் பீரிஸ், அதன்மூலம் இனங்களுக்கிடையே பிரிவினை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் இந்த நடவடிக்கைகளுக்காக தானாகவே முன்வந்து உதவி செய்யும் நடைமுறைக்கு இலங்கை எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் சாட்சிகளை சேகரிக்கும் நடவடிக்கை ஊடாக இலங்கையிலுள்ள மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்காதெனவும் அவர் கூறினார்.

அதைத் தவிர இது நாட்டின் அபிவிருத்தி மற்றும் சமாதானத்துக்கு பாதிப்பாகும் எனவும் கூறிய வெளிநாட்டமைச்சர், அண்மைக்காலங்களில் இலங்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி உள்ளதாகவும், இதனால்,இந் நடவடிக்கைகளுக்கு பெருமளவு நன்மையைப் பெற்றுத் தந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

தண்டனை வழங்கல், அரசியல் தீர்மானங்களின் பேரில் பிரிவினையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இலங்கை எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இறையாண்மை மிக்க இலங்கை எல்லா சந்தர்ப்பங்களிலும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக ஆஜராகுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் சமூக நீதிக்காக இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளை அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்தார்.

அமர்வில் உரையாற்றிய அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பயங்கரவாதம் காரணமாக இலங்கை பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட போதிலும், நாடு முழுவதும் தற்போது அமைதி, பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மோதல் முடிவுக்கு வந்ததன் பின்னர் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் சமூக நீதியை ஏற்படுத்துவதற்கு தேவையான உள்ளக நடவடிக்கைகளை இலங்கை தரப்பு ஏற்கனவே எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles