யாழில் விபத்து – மூவர் பலி! இருவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மூவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலி இராமலிங்கம் வீதியில் பூங்கனிச்சோலைக்கு அருகில் நேற்றிரவு 10.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஒரு மோட்டார் சைக்கிளில் மூவரும் , மற்றுமொரு மோட்டார் சைக்கிள் இருவரும் பயணித்த நிலையில் இரு மோட்டார் சைக்கிள்களும் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிர் எதிரே மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் இரண்டும் தீ பற்றி எரிந்த நிலையில் அயலவர்கள் கூடி தீயினை அணைத்து , பாடுகாயமடைந்த மூவரை நோயாளர் காவு வண்டியை அழைத்து வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர்.

அதேவேளை விபத்து தொடர்பில் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles