வத்தேகமவில் 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை – 55 வயது சந்தேகநபர் கைது!

வத்தேகம பிரதேசத்தில் 13 வயது பாடசாலை மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பன்விலவை வசிப்பிடமாகக் கொண்ட 55 வயதான நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவன், தனியார் வகுப்புக்குச் சென்று தன்னுடைய வீட்டுக்கு மாலை வேளையில் திரும்பிக்கொண்டிருந்த போது, மாணவனை ஏமாற்றி, கொங்கிரீட் தயாரிக்கும் இடத்துக்கு சந்தேக நபர் அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முயற்சித்ததாக குற்றம்சாட்டியுள்ளார். மாணவன் ஒருவழியாக சந்தேகநபரிடமிருந்து தப்பித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாலியல் துஷ்பிரயோகம் ​செய்ய முயன்ற சந்தேகநபருக்கு மாணவனை ஒத்த வயதில், பேரன் இருப்பதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles