ஜனாதிபதியின் அக்கிராசன உரைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் சபையிலிருந்து இன்று வெளிநடப்பு செய்வதற்கு சுதந்திர மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளது.
சுதந்திர மக்கள் கூட்டணியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் நேற்று கூடியது.
தேசிய சுதந்திர முன்னணி, சுதந்திர மக்கள் சபை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பிவிதுரு ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஶ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி உட்பட மேற்படி கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் கூடினர்.
இதன்போதே நாடாளுமன்றம் செல்வதற்கும், ஜனாதிபதி அரசின் கொள்கை விளக்க உரையை ஆற்றும்போது வெளிநடப்பு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடரை ஜனாதிபதி இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பித்து வைக்கின்றார்.
