அம்மா, அப்பா, இரு மகள்மார் சடலங்களாக மீட்பு – வவுனியாவில் சோகம்!

கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என நால்வருள்ள குடும்பமொன்றில் உறுப்பினர்கள் வீட்டிலிருந்து இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா, குட்செட் வீதி , அம்மா பகவான் ஒழுங்ககையில் பிள்ளைகளும், தாயும் படுக்கையிலும் தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் வயது42, வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான கௌ.வரதராயினி வயது36, இருபிள்ளைகளான கௌ.மைத்ரா (வயது9) , கௌ.கேசரா (வயது3) ஆகியோர் உறங்கியபடியும் சடலமாக மீட்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியா பொலிசார் மீட்கப்பட்ட சடலங்களை சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles