ஆளுங்கட்சி எம்.பி. மரணம் – பிரதான சந்தேக நபர் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரளவின் மரணத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிட்டம்புவ நகரில் கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரளவும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (20) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த 29 வயதான பஸ் சாரதி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

Latest Articles