ஆஸி. பொதுத்தேர்தலில் தொழில்கட்சி வெற்றி! புதிய பிரதமருக்கு ஜனாதிபதி கோட்டா வாழ்த்து!!

ஆஸ்திரேலியாவில் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள அந்தோணி அல்பானீஸ்சுக்கு, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கு, புதிய பிரதமருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொழில்கட்சி வெற்றிபெற்றது. மொரிஸனின் கூட்டணி மண்கவ்வியது.

இதனையடுத்து 31 ஆவது பிரதமராக அந்தோணி அல்பானீஸ் பதவியேற்கவுள்ளார்

Related Articles

Latest Articles