இ.தொ.காவுடன் கூட்டணியா? வடிவேல் சுரேஷ் மறுப்பு!

” இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் நான் கூட்டணி அமைக்கவுள்ளேன் என வெளியாகும் தகவல்கள உண்மைக்கு புறம்பானவை. அவ்வாறு எந்தவொரு திட்டமும் இல்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

உள்ளாட்சிமன்ற தேர்தலுக்காக இதொகாவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கூட்டணி அமைக்கவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இதொகா தரப்பில் இருந்தும் இது தொடர்பில் தகவல் கசியவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷிடம் வினவியபோது, மேற்படி தகவலை அவர் நிராகரித்தார்.

தேர்தலொன்று நெருங்கும்வேளை தனக்கு எதிராக அவதூறு பரப்பட்டுவதாகவும் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles