உள்ளாட்சிசபைத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து மக்கள் இன்னும் உறுதியான முடிவை எடுக்கவில்லை. எனவே, தேர்தல் பெறுபேறு எவ்வாறு அமையும் என்பதை மார்ச் முதலாம் திகதிக்கு பிறகு அறிவிக்க முடியும் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தேர்தலில் வெற்றியை எதிர்பார்த்தே அனைத்துக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. முதலிடத்தை பிடிக்க முடியும் என நாம் நம்புகின்றோம். இது தொடர்பில் சரியான கணிப்பை மார்ச் முதலாம் திகதிக்கு பிறகு அறிவிக்ககூடியதாக இருக்கும்.
தற்போதைய சூழ்நிலையில் 50 சதவீத தொகுதிகளுக்கு மேல் மொட்டு கட்சி வெற்றிநடை போடும் என நம்புகின்றோம்.
ஐக்கிய மக்கள் சக்தியோ, தேசிய மக்கள் சக்தியோ, டலஸ் தரப்போ எமக்கு எவ்விதத்திலும் சவால் இல்லை. ” -எனவும் பஸில் கூறினார்.
