எல்ல பகுதியில் பஸ் விபத்து – சாரதி பலி! 8 பேர் காயம்!!

ஊவா மாகாணம், பதுளை – எல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 73 வயதான பஸ் சாரதியே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்கள் வெல்லவாய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உமா ஓயா வேலைத்திட்டத்தில் இரவு நேர பணியில் ஈடுபட்ட தொழிலாளர் குழுவொன்றை ஏற்றிச்சென்ற பஸ்ஸே, எல்ல கரந்தகொல்ல – ரக்கிட்டகந்த பகுதியில் வைத்து பள்ளத்தில் வீழ்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles