கூட்டமைப்பு உட்பட தமிழ்க் கட்சிகளுடன் ஜெய்சங்கர் நாளை பேச்சு!

இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணித் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனையும் ஒன்றாகச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

கொழும்பில் அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 11.45 மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசுவார். இந்தச் சந்திப்புக்கு விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

அதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணி, இதொகாவினரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

Related Articles

Latest Articles