பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னுகை தோட்டம் 3 ஆம் கட்டைப் பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையிலேயே, 42 வயதுடைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து மாணிக்ககல் அகழ்விற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
