நாட்டிலுள்ள 85%க்கும் அதிகமான பெருந்தோட்ட சமூகத்தினர் முதல் கட்ட தடுப்பூசியை பெற்றுள்ளனர் மற்றும் 63% இரண்டு தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்

இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட மனித மேம்பாட்டு அறக்கட்டளை (PHDT) ஆகியவற்றின் கூட்டு முயற்சியினால் அனைத்து பெருந்தோட்ட சமூகங்களையும் பாதுகாக்க பெரும் நடவடிக்கை எடுக்கும் வகையில், செப்டம்பர் 10, 2021க்குள், 7 பிராந்தியங்களில் உள்ள 85%க்கும் மேற்பட்ட பெருந்தோட்ட சமூகத்தினருக்கு முதலாவது கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளதாகவும் மற்றும் 63% இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான தடுப்பூசி வழங்கும் திட்டத்தை துரிதப்படுத்த சுகாதார அமைச்சு, மாகாண சுகாதார அதிகாரிகள் மற்றும் தோட்ட மனித மேம்பாட்டு அறக்கட்டளை, பிராந்திய தோட்ட நிறுவனங்கள் (RPCs) ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

‘கொவிட் தொற்றுநோய் தீவிரமாக மீண்டும் பரவியதால், எமது தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அனைத்து பிராந்திய தோட்ட நிறுவனங்களினதும் முன்னுரிமையான நடவடிக்கை ஆகிவிட்டது.

தடுப்பூசி வழங்கும் திட்டம் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்கிறோம்.

செப்டம்பர் 2021 இறுதிக்குள் எங்கள் அனைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கும் முழு தோட்ட சமூகத்திற்கும் முழுயாக தடுப்பூசி வழங்குவதே எங்கள் குறிக்கோள்.’

என இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் ஊடக பேச்சாளர் கலாநிதி ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.

‘இந்த தடுப்பூசி வழங்கும் திட்டத்தை வெற்றிகரமாகச் செய்வதில் அரசாங்கமும் மற்ற அதிகாரிகளும் அளிக்கும் மகத்தான பங்களிப்பிற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், எங்கள் தோட்டத் தொழிலாளர்கள் அனைவரின் பாதுகாப்பிற்கும் நலனுக்கும் நாங்கள் முழுமையாக உறுதிபூண்டுள்ளோம்.’

செப்டம்பர் 10ஆம் திகதி ஆகும் போது, 30-59 வயதுக்குட்பட்டவர்களில் 87%க்கும் அதிகமானோர் கொவிட் தடுப்பூசியின் முதலாவது ஊசியை ஏற்றிக் கொண்டனர் மற்றும் 58%க்கும் அதிகமானோர் இரண்டாவது தடுப்பூசியை ஏற்றிக் கொண்டனர்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டது, 92%க்கும் அதிகமான தோட்ட மக்கள் முதலாவது தடுப்பூசியையும் 79% இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அதிக அளவில் வசிக்கும் நுவரெலியா மாவட்டத்தில் (ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளடக்கிய) தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகஇலங்கை பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

30-60 வயதிற்குட்பட்ட 85%க்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே முதலாவது தடுப்பூசியை எடுத்துள்ளனர் மற்றும் 54%க்கும் அதிகமானோர் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், இதே வயதை ஒத்த பெருந்தோட்ட ஊழியர்களை கொண்டுள்ள ஏனைய தோட்ட நிறுவனங்களை வைத்திருக்கும் மற்ற மாவட்டங்களில் 89%க்கும் அதிகமான மக்கள் முதலாவது தடுப்பூசியையும், 62% இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

‘கொவிட் தடுப்பூசி மூன்று கட்டங்களாக நிர்வகிக்கப்பட்டது, முதலில் முன்னணி தொழிலாளர்களுக்கு, இரண்டாவது தொழிற்சாலை தொழிலாளர்கள், சமூகத் தலைவர்கள் உட்பட, மற்றும் மூன்றாவது ஊழியர்கள் மற்றும் பிற மக்களுக்கு.

நாங்கள் மூன்றாம் கட்டத்தின் முடிவை நெருங்கிவிட்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். சம்பந்தப்பட்ட தரப்பினரின் உதவியின்றி தடுப்பூசியை விரைவுபடுத்துவது சாத்தியமில்லை.

இது தடுப்பூசி குறித்த சமூகத்தில் உள்ள ஆதாரமற்ற சந்தேகங்களை வெகுவாகக் குறைத்தது மற்றும் தோட்டப் பகுதிகளில் வெற்றிகரமாக தடுப்பூசியை வழங்க உதவியது.’ என Pர்னுவு பணிப்பாளர் நாயகம் லால் பெரேரா கூறினார்.

Image 1to 6 – தெரணியாகல, யட்டியந்தோட்டை மற்றும் தலிகமுவ ஆழுர் பிரிவுகள் உட்பட பல தோட்டங்களில் கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம்.

Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05
Video thumbnail
மலையகம் நேற்று இன்று நாளை I Shortfilm
06:51
Video thumbnail
நிலைமாற்றம் I ShortFilm
07:21

Related Articles

Latest Articles