நாவலப்பிட்டிய, உச்சிமலை தோட்டத்தின் கீழ்பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முத்துமாரியம்மன் ஆலயத்தில், அம்மனின் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த பெறுமதியான தாலிக்கொடி உட்பட பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை , ஆலயத்தின் யன்னலை உடைத்து, உள்நுழைந்தே கொள்ளையர்கள் கைவரிசைக்காட்டியுள்ளனர்.
இது சம்பந்தமாக நாவலப்பிட்டிய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
